உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மீண்டும் மீண்டும் ஏமாறாதீர்கள் மக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

மீண்டும் மீண்டும் ஏமாறாதீர்கள் மக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

கோவை:மோசடிகள் அதிகம் நடந்து வரும் நிலையில், ஆன்லைன் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சைபர் கிரைம் மோசடி புகார்கள் அதிகரித்து வருகின்றன.

மோசடி@

@கடந்த ஆண்டு ஜனவரி முதல், நவம்பர் வரையிலான காலகட்டத்தில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், 5,760 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர்.தினமும், குறைந்தபட்சம், 20 வழக்குகள் பதிவாகின்றன.முந்தைய காலங்களில், தேக்குமரத்தில் துவங்கிய இந்த மோசடிகள், ஈமு கோழி வளர்ப்பு, பாசி நிதி நிறுவன மோசடி, டேட்டா டிரான்ஸ்கிரிப்ஷன், பைன் பியூச்சர், பங்கு வர்த்தக மோசடிகள் என, மோசடிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன. பல நுாறு கோடி ரூபாய் மோசடியால், பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சைபர் கிரைம், பொருளாதார குற்றப்பிரிவு, குற்றப்பிரிவு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், புதுப்புது பெயரில் மோசடிகள், அரங்கேறிக் கொண்டுதான் உள்ளன.குறைந்த முதலீட்டில் அதிக லாபம் என, பொதுமக்களின் ஆசையை துாண்டி பல கோடி ரூபாய் மோசடி செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. முதலீட்டாளர்கள் குறைவாக இருக்கும் போது மோசடிகள் அரங்கேறுவதில்லை. அதிக எண்ணிக்கையில் முதலீட்டாளர்களால், பல கோடி ரூபாய் கிடைத்ததும் மோசடிகள் நடக்கின்றன.குறுகிய காலத்தில், பெரும் தொகையை பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஏமாற்றத்துக்கு வழிவகுக்கிறது. சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பணம் உடனடியாக கிடைத்தால் அதை நம்புகின்றனர். மக்களை நம்ப வைப்பதற்காகவே, ஆரம்பத்தில் லாபம் கிடைப்பது போல் தகவல் பரப்புவர். இதுவரை எத்தனை நிறுவனங்கள் மோசடி செய்துள்ளன என பார்க்க வேண்டும். அவர்களால் எந்த அடிப்படையில் முதிர்வு தொகையை வழங்க முடியும் என, யோசிக்க வேண்டும்.

நிதி ஆதாரம் என்ன?

ஒரு நிறுவனம், முதலீட்டுக்கு அதிக முதிர்வு தொகை வழங்குகிறது என்றால், அதுகுறித்து ஆராய வேண்டும். அவர்களுக்கு அந்த தொகையை வழங்குவதற்கான நிதி ஆதாரம் குறித்து அறிய வேண்டும். எந்த ஒரு நிதி ஆதாரமும் இன்றி, முதலீட்டுக்கு பல மடங்கு முதிர்வு தொகை தருகிறோம் என்றால் அதுகுறித்து சிந்திக்க வேண்டும். திடீரென ஒரு நாள் வருவாய் நின்று விட்டால், யாரிடம் புகார் அளிப்பார்கள்? மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை