உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ்காரர் மர்ம மரணம்

போலீஸ்காரர் மர்ம மரணம்

கோவை; கோவைப்புதுாரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காவது பட்டாலியனில், போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் புஷ்பராஜ்,33. அங்குள்ள குடியிருப்பில் மனைவி சுமித்ரா தேவியுடன் வசித்து வந்தார். சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு மனைவியுடன் சென்றார். கோவைக்கு அவர் மட்டும் திரும்பினார். வீட்டில் தனியாக இருந்த புஷ்பராஜுவுக்கு, மனைவி சுமித்ராதேவி மொபைல் போனில் பலமுறை அழைத்தும் எடுக்கவில்லை. அக்கம்பக்கத்தார் ஜன்னல் வழியாக பார்த்தபோது, புஷ்பராஜ் மின் விசிறியில் துாக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். குனியமுத்துார் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி