உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உருளைக்கிழங்கு பாய் ரோட்டோரம் ‘பை’

உருளைக்கிழங்கு பாய் ரோட்டோரம் ‘பை’

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரம் நெல்லித்துறை சாலையில், 70 க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. நாட்டின் பல பகுதிகளிலிருந்து உருளைக்கிழங்கு விற்பனைக்கு வருகிறது. லாரிகளில் கொண்டுவரப்படும் உருளைக்கிழங்கு மூட்டையை மழை வெய்யிலிலிருந்து பாதுகாக்க அதன் மேற்பகுதியில் பாய்களை விரித்து கட்டுகின்றனர். மூட்டைகளை இறக்கிய பின், பாய்களை சாலையோரங்களில் எறிகின்றனர். இவை மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையில், டேங்க் மேட்டிலிருந்து, நால் ரோடு வரை, ஐந்து இடங்களில் குப்பை மேடாக குவிந்து கிடக்கின்றன. இவற்றை ஊராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை