உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குறைப்பிரசவ குழந்தைகள் பராமரிப்பு விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

 குறைப்பிரசவ குழந்தைகள் பராமரிப்பு விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் துறை சார்பில் உலக குறைப் பிரசவக் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. என்.ஐ.சி.யு.,வில் சிகிச்சை பெற்று குணமடைந்த முன்னாள் குறைமாதக் குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சி மற்றும் விழிப்புணர் வுடன் இந்த நாளை கொண்டாடி மகி ழ்ந்தனர். குறைப்பிரசவ குழந்தைகளின் பெற்றோருக்கு ஆதரவளிக்கும் வகையில், நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிடப்பட்டது. இதன்நோக்கம், குழந்தைகள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் பெற்றோர்களுக்கு முழுமையான பராமரிப்பு வழிகாட்டுதல் வழங்குவதாகும். மருத்துவமனையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், மருத்துவ இயக்குனர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன் ஆகியோர் வீடியோக்களை வெளியிட்டடனர். நிகழ்வில், பச்சிளங்குழந்தைகளுக்கான டாக்டர் சித்தார்த் புத்த வரப்பு, பச்சிளங்குழந்தைகள் ஆலோசகர் டாக்டர் சுஜா மரியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ