உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அத்திக்கடவு--அவிநாசி 2ம் கட்ட திட்டத்துக்கு முன்னுரிமை; உரிமைக் குழு கூட்டத்தில் தீர்மானம்

அத்திக்கடவு--அவிநாசி 2ம் கட்ட திட்டத்துக்கு முன்னுரிமை; உரிமைக் குழு கூட்டத்தில் தீர்மானம்

மேட்டுப்பாளையம், : அத்திக்கடவு-அவிநாசி 2ம் கட்ட திட்டத்துக்கு முன்னுரிமை கொடுக்க, வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் ஈஸ்வரி அம்மாள் சேரன் திருமண மண்டபத்தில், அத்திக்கடவு - அவிநாசி 2ம் கட்ட திட்டத்தின் உரிமைக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பவானி நதிநீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு தலைவர் அரங்கசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்த்த நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் காரமடை, பவானிசாகர், அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய ஒன்றிய பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளை, தமிழக அரசு அத்திக்கடவு-அவிநாசி 2ம் கட்ட திட்டத்தில் சேர்த்துள்ளது. ஆனால் திட்டப்பணிகளுக்கு, அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. எனவே முன்னுரிமை கொடுத்து, இந்த திட்டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி விரைவில் நிறைவேற்ற வேண்டும். வருகிற அக்டோபர் இரண்டாம் தேதி, ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், இத்திடட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்ப, ஊராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது, உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை