உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரூ.29 லட்சத்துக்கு விளைபொருள் விற்பனை

 ரூ.29 லட்சத்துக்கு விளைபொருள் விற்பனை

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் வாயிலாக, 29 லட்சம் ரூபாய்க்கு விளைபொருட்கள் விற்பனையானது. கிணத்துக்கடவு, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விளைபொருட்களை இருப்பு வைத்து, விலை உயரும் போது இ-நாம் மற்றும் ஏலம் முறையில் விற்பனை செய்து வருகிறார்கள். இதில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இம்மாதம் வரை, மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ- நாம்) வாயிலாக, 1,370 மெட்ரிக் டன் அளவில் கொப்பரை, தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட விளைபொருட்கள், 29 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இத்தகவலை, கோவை முதுநிலை செயலாளர் ஆறுமுகராஜன் மற்றும் கிணத்துக்கடவு விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை