உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேகத்தை விட விவேகம் முக்கியம்; மலைப்பாதையில் கவனம் தேவை

வேகத்தை விட விவேகம் முக்கியம்; மலைப்பாதையில் கவனம் தேவை

பொள்ளாச்சி; மழைப்பொழிவு அதிகரித்துள்ளதால், பொள்ளாச்சி, வால்பாறை ரோடுகளில் வாகன ஓட்டுனர்கள், கவனமாக செயல்பட்டு விபத்துகளை தவிர்க்க வேண்டும், என, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.பொள்ளாச்சி -- வால்பாறை ரோட்டில், அதிகதிறன் கொண்ட இருசக்கர வாகனங்களில், வேகமாக செல்கின்றனர். வால்பாறை ரோடு மட்டுமின்றி, மற்ற ரோடுகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிலர், வாகனத்தை வளைத்து, நெளித்து வேகமாக ஓட்டி மற்றவர்களை அச்சப்படுத்தி கவனத்தை சிதைத்து விபத்து ஏற்படுத்தும் சூழல் நிலவுகிறது.தற்போது, பொள்ளாச்சி, வால்பாறை சுற்றுப்பகுதிகளில் தொடர் மழை பெய்யும் சூழலில், வேகத்தை விட விவேகமாக செல்ல வேண்டும் என, அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.மலைப்பாதையில் வாகன ஓட்டுனர்கள், வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். தற்போது மழைப்பொழிவு அதிகம் உள்ளதால் வேகமாக செல்லும் போது, ரோட்டில், 'கிரிப்' கிடைக்காமல் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும், கற்கள் உருண்டு விழும் பகுதிகள் உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியை கடக்கும் போது வாகனங்களில் நிதானமாக செல்வது அவசியம்.எனவே, வால்பாறைக்கு இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், அதிவேகத்தை குறைத்து, அவர்களது பாதுகாப்பு மற்றும் எதிரே வருபவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.வட்டார போக்குவரத்து அலுவலர் கோகுலகிருஷ்ணன் கூறியதாவது:மழை காலத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. விபத்துகளை கட்டுப்படுத்த விழிப்புணர்வுடன் பயணிப்பதே சிறந்தது. வாகன ஓட்டுனர்கள், மழை காலத்தில் வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். பயணத்தின் போது மழை பெய்தால், வாகனத்தை ஓரமாக நிறுத்தி, மழை இடைவெளி விட்டதும் பயணிக்க வேண்டும். ெஹல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும்.எதிரே வரும் வாகனங்களை கவனிப்பது போன்று, ரோட்டில் குழிகள் உள்ளதா என்பதையும் கவனித்து வாகனம் ஓட்ட வேண்டும்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை