உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீலகிரி எம்.பி.யிடம் பொதுமக்கள் புகார்

நீலகிரி எம்.பி.யிடம் பொதுமக்கள் புகார்

அன்னுார்; குன்னத்தூராம் பாளையத்தில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி 16 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயில் கட்டப்பட்டுள்ளது. அங்கு நடந்த விழாவில் நீலகிரி எம்.பி., ராஜா கலந்து கொண்டு குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். அப்போது கிராம மக்கள் அவரிடம், 'ரேஷன் பொருள் வாங்க 1.5 கி.மீ., தொலைவு செல்ல வேண்டி உள்ளது. இங்கு 600 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளோம். இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அன்னுார் மற்றும் அவிநாசிக்கு செல்லும் பஸ்கள் இங்கு நிறுத்துவதில்லை. இதனால் அதிக தொலைவு நடந்து சென்று பஸ் ஏற வேண்டி உள்ளது,' என புகார் தெரிவித்தனர். 'இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்,' என்று கூறி எம்.பி., ராஜா அங்கிருந்து கிளம்பினார். இத்துடன் கவுண்டம்பாளையத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொண்ட மேல்நிலைத் தொட்டியையும் திறந்து வைத்தார். பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணைத் தலைவர் விஜயகுமார், அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ