உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொதுமக்கள் - போலீஸ் நல்லுறவு ரோந்து 

பொதுமக்கள் - போலீஸ் நல்லுறவு ரோந்து 

பொள்ளாச்சி; விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பொதுமக்கள் நல்லுறவு குறித்து போலீசார் ரோந்து நடந்தது. விநாயகர் சதுர்த்தி விழா அடுத்தமாதம் நடக்கிறது. இவ்விழாவை அமைதியான முறையில் கொண்டாடவும், போலீசார், பொதுமக்களிடம் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக, பொள்ளாச்சி கிழக்கு போலீசார் சார்பில் முதற்கட்ட ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங் தலைமையில், போலீசார், போக்குவரத்து போலீசார், கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கடைவீதி, கோவை ரோடு, மத்திய பஸ் ஸ்டாண்ட், வெங்கட்ரமணன் வீதி வழியாக நகரப்பகுதிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் வழியாக சென்றனர். பொதுமக்களுக்கு போலீசார் உறுதுணையாக இருப்போம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த ரோந்து நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ