பார்வையாளர்களை கவர்ந்த புரந்தரதாசர் ஆராதனை விழா
கோவை; கோவையில், பி.என்.ராகவேந்திராராவ் மெமோரியல் டிரஸ்ட் சார்பில், புரந்தரதாசர் ஆராதனை விழாவை முன்னிட்டு, இசை விழா கடந்த, 28ம் தேதி முதல் ராம்நகரில் உள்ள, கோதண்டராமர் கோவிலில் நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று இரவு, கர்நாடக சங்கீத வித்வான் சந்தீப் நாராயணன் குழுவினரின் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி நடந்தது. முருகபூபதி மிருதங்கம், வயலின் பாஸ்கர், கடம் கிருஷ்ணா ஆகியோர் வாசித்தனர். இன்று வித்யா பூஷனா குழுவினரின், இசை நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது.