உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் வரும் நேரம் குறித்து அறிவிப்பு பலகை வையுங்க!

பஸ் வரும் நேரம் குறித்து அறிவிப்பு பலகை வையுங்க!

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டில், பஸ் வரும் நேரம் குறித்த அறிவிப்பு பலகை இல்லாததால் பயணியர் சிரமப்படுகின்றனர்.கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து, பல்வேறு பணிகளுக்கும், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் என, பலதரப்பட்ட மக்கள் பஸ் ஸ்டாண்டை பயன்படுத்தி வருகின்றனர்.கிணத்துக்கடவில் மார்க்கெட், அரசு அலுவலகம் மற்றும் இங்குள்ள கடைகளில் அதிகப்படியானோர் பணி புரிந்து வருவதால், இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து தங்கள் பகுதிகளுக்கு செல்கின்றனர்.மேலும், பஸ் ஸ்டாண்டினுள் அரசு டவுன் பஸ்கள் வரும் நேரம் குறித்த அறிவிப்பு பலகை இல்லாததால், பஸ் ஸ்டாண்டில் நிற்கும் பயணியர், பஸ் எப்போது வரும் என்பது தெரியாமல் குழப்பமடைகின்றனர்.மேலும், புதிதாக இங்கு வருபவர்கள், பஸ் வரும் நேரம் தெரியாமல் அலைமோதுகின்றனர். பஸ் வரும் நேரம் குறித்த அறிவிப்பு பலகை வைத்தால், பயணியரிடையே ஏற்படும் குழப்பத்துக்கு தீர்வு கிடைக்கும்.எனவே, பஸ் ஸ்டாண்டில் பயணியர் நலன் கருதி, பஸ் வரும் நேரம் குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும், என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை