| ADDED : ஜன 20, 2024 08:20 PM
கோவை:கோவை கே.ஜி., மருத்துவமனைக்கு, சிறந்த செயல் திறன் அடிப்படையில், தர மேம்பாட்டு மையமாக சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு (CAHO) அங்கீகரித்துள்ளது.இதுகுறித்த தேசிய தர கருத்தரங்கு, கே.ஜி., மருத்துவமனை அரங்கில் நேற்று நடந்தது. கே.ஜி., மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் தலைமை வகித்தார். தர மேம்பாட்டு மையத்துக்கான அங்கீகார சான்றிதழை, 'சிஏஹெச்ஓ'ன் பொதுச்செயலாளர் டாக்டர் லல்லு ஜோசப், கே.ஜி., மருத்துவமனைக்கு வழங்கினார்.கோவை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை 'டீன்' நிர்மலா பேசுகையில், ''கே.ஜி., மருத்துவமனைக்கு, 'சிஏஹெச்ஓ' வின் அங்கீகாரம் கிடைத்திருப்பது நல்ல விஷயமாகும். நோயாளிகளுக்கு தரமான சிகிச்சையை அளிக்க வேண்டியது ஒவ்வொரு மருத்துவமனைகளின் கடமை. அதற்கு டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு முறையான பயிற்சியும், அனுபவமும் தேவைப்படுகிறது. இது போன்ற கருத்தரங்குகளில் விவாதித்து சிறந்த முறையில் செயல்படுத்தும் போதுதான், மக்களுக்கு சரியான மருத்துவ வசதி கிடைக்கும்.'' என்றார்.கே.ஜி., மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம், டீன் குமரன், தலைமை டாக்டர் இளங்கோவன் வீரப்பன் மற்றும் டாக்டர்கள் பங்கேற்றனர்.