உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மானாவாரிக்கு கைகொடுத்த மழை உரமிடும் பணிகள் தீவிரம்

 மானாவாரிக்கு கைகொடுத்த மழை உரமிடும் பணிகள் தீவிரம்

உடுமலை: தொடர் மழைக்குப்பிறகு, மானாவாரி மக்காச்சோள பயிர்களுக்கு உரமிடுதல் மற்றும் மருந்து தெளித்தல் பணிகளை, விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, மானாவாரியாக மக்காச்சோளம் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிரின் வளர்ச்சித்தருணத்தில் மழை எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப கடந்த சில நாட்களாக, உடுமலை சுற்றுப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. விவசாயிகள் கூறியதாவது: மானாவாரி சாகுபடியில், மழையை அடிப்படையாக கொண்டே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், மக்சாச்சோள பயிர்களுக்கு உரமிடும் பணிகளை துவக்கியுள்ளோம். வளர்ச்சி தருணத்தில், குறித்த நேரத்தில் மழை பெய்து உரம் வைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், படைப்புழு தாக்குதல் குறையவில்லை. புழுக்களை கட்டுப்படுத்த பலர் மருந்து தெளித்து வருகின்றனர். தொடர் மழைக்கு பிறகும், புழுத்தாக்குதல் குறையவில்லை. மானாவாரி சாகுபடி மட்டுமல்லாது, பிற சாகுபடிகளிலும் மழைக்கு பிறகு உரமிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே வேளாண்துறையினர், சாகுபடிக்கு போதுமான உரம் இருப்பு இருப்பது குறித்து, ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ