உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ராமபிரான் கோவில் ஆண்டு விழா

 ராமபிரான் கோவில் ஆண்டு விழா

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, பட்டணம் ராமபிரான் கோவிலில், ஆண்டு விழா சிறப்பு வழிபாடு நடந்தது. கிணத்துக்கடவு, பட்டணத்தில் உள்ள, லட்சுமண, பரத, சத்ருக்கண, ஹனுமத் சமேத சீதா ராமபிரான் கோவில் ஆண்டு விழா நிகழ்ச்சிகள், கடந்த, 6ம் தேதி துவங்கியது. இதில், சுவாமிக்கு தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, சிறப்பு அபிஷேகம் அலங்கார வழிபாடு நடந்தது. தொடர்ந்து, வள்ளி கும்மி நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம், ஆண்டு விழா சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி