மேலும் செய்திகள்
ரேஷன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
26-Sep-2024
கோவை : அரசு நியாயவிலை கடைகளை, தனித்துறையாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 32 கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக, தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.இது குறித்து, சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் விஸ்வநாதன் கூறியதாவது: பொது விநியோகத் திட்டத்துக்கு என, தனித்துறை அறிவிப்போம் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இதுவரை அறிவிக்கவில்லை. அதை விரைவாக அறிவிக்க வேண்டும். இந்த தீபாவளிக்கு, ரேஷன்கடை பணியாளர்களுக்கு, 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும். சரியான எடையில், தரமான பொருட்களை பொட்டலமாக வழங்கிட வேண்டும். கல்வித் தகுதி அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும்.அபராதத் தொகையை ரத்து செய்தல், கட்டுப்பாடற்ற பொருட்களை கட்டுப்பாடு இல்லாமல் இறக்குவதை தடுத்தல், உள்ளிட்ட 32 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் வரும் 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் அடையாள வேலை நிறுத்தம் செய்ய இருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
26-Sep-2024