உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

போத்தனூர்;சுந்தராபுரம் அடுத்து சிட்கோ மேம்பாலம் அருகேயுள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியின், 20 வது பட்டமளிப்பு விழா ரத்தினம் கல்வி குழும தலைவர் மதன் செந்தில். தலைமையில் நடந்தது. மத்திய அமைச்சர் முரளிதரன் பேசுகையில், சர்வதேச தரத்தில், மாணவர்களுக்கு மொழித்திறன் அவசியமாகிறது. நாட்டின் தகவல் தொடர்பு சார்ந்தவைகள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் உள்ளது. இளைஞர்கள் தொழில் துவங்க அதிகளவு வாய்ப்புகள் உள்ளன. நாட்டின் வரலாறு, கலாசாரம் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரியம் சிறந்தவையாக காணப்படுகிறது என்றார்.தொடர்ந்து, 750 மாணவர்களுக்கு பட்ட சான்றிதழை வழங்கினார். முன்னதாக கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். ரத்தினம் கல்வி குழும இயக்குனர் ஷீமா, செயலாளர் மாணிக்கம், துணை தலைவர் நாகராஜ், துணை முதல்வர் சுரேஷ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தினகரன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை