மேலும் செய்திகள்
கருத்தரங்கு
10-Oct-2025
கோவை: ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி, ஆரக்கிள் இந்தியா பிரைவேட் நிறுவனம் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தினால் மாணவர்கள், ஆரக்கிள் ஜாவா பவுண்டேசன் பயிற்சி திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். மாணவர்கள் உலகளாவிய தரத்தில் தேவைப்படும் மென்பொருள் திறன்கள், தொழில் நடைமுறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களில் நுணுக்கமான அறிவைப் பெறுவார்கள். இது, கல்வி மற்றும் தொழில் உலகம் இடையிலான இடைவெளியை குறைக்கும் முக்கிய முயற்சி என, ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். ஆரக்கிள் பிராந்திய மேலாளர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ''கல்வி மற்றும் தொழில் துறைகள் இணைந்து செயல்படுவதனால், மாணவர்கள் தற்போது மாறிவரும் தொழில்நுட்ப உலகிற்கு தயாராக இருப்பார்கள், '' என்றார். துணை முதல்வர் சுரேஷ், பேராசிரியர்கள், மாணவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
10-Oct-2025