உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு இயக்கம்

புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு இயக்கம்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில், உலக புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு இயக்கம் நடைபெற்றது.ஆண்டுதோறும் ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில், உலக புத்தக தினத்தை கொண்டாடும் வகையில் வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின், நகராட்சி கமிஷனர் அமுதா ஆகியோர் கலந்துகொண்டு, அறிவு சார் மையத்திற்கு வருகை தந்திருந்த மாணவர்கள், வாசகர்கள், பொதுமக்கள் ஆகியோரிடையே புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இந்த நிகழ்வின் ஒருபகுதியாக, ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் மணி, அறிவியல் இயக்கத்தின் நூல்களை மாணவர்களுக்கு வழங்கினார். அறிவு சார் மைய நூலகர் பவித்ரா, மாரிமுத்து ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி