உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில் முன்பதிவு அவகாசம் குறைப்பு; நேற்று முதல் அமலுக்கு வந்தது

ரயில் முன்பதிவு அவகாசம் குறைப்பு; நேற்று முதல் அமலுக்கு வந்தது

கோவை ; ரயிலில் முன்பதிவு செய்வதற்கான அவகாசம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்ட மாற்றம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.முன்பதிவு வசதிகள் கொண்ட ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி அமலில் இருந்தது. இதனை, மாற்றி 60 நாட்களாக குறைத்து ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இம்மாற்றம் நேற்று 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.பயணத்தை துல்லியமாக திட்டமிடாமல், தோராயமாக திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, கடைசி நேரத்தில் கேன்சல் செய்வது இதன் வாயிலாகக் குறையும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.டிக்கெட் கிடைக்காமல் இருப்பது ஒருபுறம், ரயில்கள் இருக்கை நிரம்பாமல் காலியாக செல்வது மறுபுறம் என இருபிரச்னைகளுக்கும் இதனால் தீர்வு கிடைக்கும்.இந்த மாற்றத்தால் டிக்கெட் மோசடிகள், ஆள்மாறாட்டம் குறையும். பயணம் செய்யாதவர்கள், முன்பதிவு என்ற பெயரில் டிக்கெட்களை புக் செய்து வைத்துவிடுவது குறையும். ரயில் பயணத் திட்டமிடல் மேலும் துல்லியமாகும், முன்பதிவில்லா பயணச்சீட்டு விற்பனை பாதிக்காது என்பன உள்ளிட்ட நன்மைகள் நடக்கும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.புதிய நடைமுறை அமலுக்கு வந்ததை மனதில் வைத்து, முன்பதிவை மேற்கொள்ளும்படி பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை