பாதயாத்திரை குழுவுக்கு குளிர்பானம்
போத்தனூர்; கோவை சுந்தராபுரம் அடுத்து எம்.ஜி.ஆர்., நகரில், பூங்குழலி மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் சார்பில் ஆண்டுதோறும் பழநிக்கு பாதயாத்திரை செல்வர்.நேற்று ஒரு குழு பாதயாத்திரை புறப்பட்டது. முன்னதாக சுமார், 60க்கும் மேற்பட்டோர் காவடியுடன் குறிச்சி பொங்காளியம்மன் கோவிலிலிருந்து, பூங்குழலி மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இவர்களுக்கு கோவில் அருகே சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் சாலையிலுள்ள தீனுல் இஸ்லாம் சுன்னத் ஜமா- அத் பள்ளிவாசல் சார்பில், குளிர்பானம், மோர் வழங்கப்பட்டது.பள்ளிவாசல் செயலாளர் இத்ரீஸ், இணை செயலாளர் அப்துல்காதர், நிர்வாக கமிட்டி உறுப்பினர் அப்பாஸ் மற்றும் அ.ம.மு.க.,வை சேர்ந்த ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.