உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு இல்லாத கடைகள் அகற்றம்

பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு இல்லாத கடைகள் அகற்றம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் பராமரிப்பு இல்லாத கடைகளை நகராட்சி நிர்வாகம் இடித்து அகற்றுகிறது. பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் கடந்த, 1985ம் ஆண்டு அண்ணா மத்திய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. அதன் எதிரே, 2010ம் ஆண்டு புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. பழைய பஸ் ஸ்டாண்டில், கோவை, பழநி, திருப்பூர் வெளியூர் பஸ்களும், நெகமம் வழித்தட உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்களும் வந்து செல்கின்றன. இதனால், பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர். பழைய பஸ் ஸ்டாண்டில் நகராட்சி வாயிலாக வணிக ரீதியாக, 36 கடைகள் வாடகை கட்டடமாக இயங்கியது. ேஹாட்டல், பேக்கரி, டீ உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டன. இவை பழுதான நிலை இருந்தது. இதனால், அங்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுவதாக, கடையை காலி செய்ய கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நகராட்சி வாயிலாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. கடந்த மே மாதம் இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, கடந்த செப். மாதம் ஒரு சில கடைகள் இடித்து அகற்றப்பட்டன. தொடர்ந்து, பஸ் ஸ்டாண்டில் திருப்பூர் பஸ்கள் நிறுத்தப்பகுதி அருகே இருந்த கடைகளும் இடித்து அகற்றும் பணிகள் நேற்று முதல் துவங்கியுள்ளது. இக்கடைகளுக்கு மாற்றாக புதிய கடை கட்டித்தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ