உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையில் மண்ணை அகற்றினால் வாகன விபத்தை தவிர்க்கலாம்

சாலையில் மண்ணை அகற்றினால் வாகன விபத்தை தவிர்க்கலாம்

மேட்டுப்பாளையம்:காரமடை சாலையில் உள்ள மண்மேட்டால், அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன.காரமடையில் இருந்து, மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லை வரை உள்ள சாலை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. சாலையின் மையப் பகுதியில் டிவைடர் வைக்கப்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொரு வழியிலும், ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் செல்லும் அளவிற்கு, சாலைகள் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏதும் ஏற்படுவதில்லை. ஆனால் காரமடை, மேட்டுப்பாளையம் நகரில், சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கடந்த மாதம் பெய்த கன மழையால், காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், வெள்ளத்தில் அடித்து வந்த மண், காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, 30 மீட்டர் நீளத்துக்கு, மண் தேங்கியது. சாலையின் மையப்பகுதி வரை, மண் பரவி உள்ளதால், அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. அதனால் இந்த மண் மேட்டை அகற்றும்படி, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு, பல்வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் நடவடிக்கை எடுத்து, மண்ணை அகற்றவில்லை.அதனால் இந்த இடத்தில், தினமும் இரு சக்கர வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. மண்ணில் இருசக்கர வாகனங்கள் சறுக்கி விழுந்து, பலர் காயமடைகின்றனர். எனவே பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு, உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், இந்த மண் மேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை