உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லண்டனில் உயிரிழந்த கோவை வாலிபர் உடலை விரைந்து வழங்க கோரிக்கை

லண்டனில் உயிரிழந்த கோவை வாலிபர் உடலை விரைந்து வழங்க கோரிக்கை

கோவை:லண்டனில் உயிரிழந்த கோவையை சேர்ந்தவரின் சடலத்தை, விரைந்து வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோவை மருதமலை ஐ.ஓ.பி., காலனியை சேர்ந்த பட்டாபிராமனின் மகன், விக்னேஷ், 36. இவரது மனைவி ரம்யா. விக்னேஷ், லண்டனில் உள்ள ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்தார். மனைவியுடன் லண்டனில் உள்ள, ரீடிங் பகுதியில் தங்கியிருந்தார். கடந்த, 14ம் தேதி இரவு சைக்கிளில் பணிக்கு செல்லும் போது, கார் மோதி உயிரிழந்தார். லண்டன் தாமஸ்வேலி போலீசார், கொலை வழக்கு பதிந்து, சந்தேகத்தின் பேரில், காலித் என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.இந்நிலையில், உயிரிழந்த விக்னேஷின் சடலத்தை விரைந்து வழங்க, அவரது பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக, அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுதுறை ஆணையரகம் சார்பில், லண்டனில் உள்ள, இந்திய துாதரகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, விக்னேஷின் தந்தை பட்டாபிராமனிடம் கேட்டபோது, ''தற்போது இவ்விவகாரம் பல்வேறு அரசு துறைகளின் பரிந்துரையில் இருப்பதால், அது சுமூகமாக முடியும் என எதிர்பார்க்கிறோம். வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை