மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த கோரிக்கை
21-Aug-2025
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ள ரோட்டில், குப்பை குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷனில் பயணியர் சென்று வர, முன் பகுதியிலும், பின் பகுதியிலும் ரோடு உள்ளது. இதில், பின் பகுதியில் உள்ள ரோடு சேதமடைந்து மேடு பள்ளமாக இருப்பதால், பெரும்பாலான மக்கள் இந்த ரோட்டில் செல்வதை தவிர்க்கின்றனர். ஒரு சில விவசாயிகள் மட்டுமே இந்த ரோட்டில் சென்று வருகின்றனர். தற்போது, இந்த ரோட்டோரத்தில் அதிகளவு பிளாஸ்டிக் கழிவு மற்றும் மூட்டை மூட்டைகளாக குப்பை சிலர் வீசி செல்கின்றனர். இது மட்டுமின்றி, காலி மது பாட்டில்கள் மற்றும் மீன் இறைச்சி கழிவு கொட்டியுள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அருகில் விளை நிலம் இருப்பதால் விவசாயிகளும் பாதிக்கின்றனர். இந்த ரோட்டில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் போது பாதிப்பு ஏற்படுவதால், ஆடு, மாடு உள்ளிட்டவைகளை இந்த ரோட்டில் மேய்ச்சலுக்கு விடுவதை விவசாயிகள் தவிர்க்கின்றனர். இரவு நேரத்தில், நடமாட்டம் இல்லாததால், இந்த வழித்தடத்தில் திறந்தவெளியில் அமர்ந்து மது குடிக்கின்றனர். இவ்வளவு பிரச்னைகள் நிலவும் இந்த ரோட்டில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். ரயில்வே நிர்வாகம் சார்பில் இந்த ரோட்டை சீரமைத்து, பராமரிக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
21-Aug-2025