மேலும் செய்திகள்
நீரோடை ஓரத்தில் தடுப்பு அமைக்கணும்!
21-Jan-2025
கிணத்துக்கடவு; குளத்துப்பாளையத்தில் இருந்து நெகமம் இணைப்பு சாலை வரை, ரோடு விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட குளத்துப்பாளையத்தில் இருந்து, நெகமம் இணைப்பு சாலையில் நாள்தோறும் ஏராளமானோர் வாகனங்களில் பயணிக்கின்றனர். இந்த ரோட்டில் பஸ் போன்ற கனரக வாகனங்கள் வரும்போது, எதிரே வரும் வாகனங்கள் ரோட்டில் செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, விவசாயிகள் பைக்கில் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் போது, எதிரே கனரக வாகனங்கள் வந்தால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி, குறுகலாக உள்ள இந்த ரோட்டை விரிவுபடுத்த வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்திகின்றனர்.
21-Jan-2025