உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நெரிசலுக்கு தீர்வு காண கலெக்டரிடம் கோரிக்கை

நெரிசலுக்கு தீர்வு காண கலெக்டரிடம் கோரிக்கை

வால்பாறை, ;வால்பாறை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு போலீசார் நிரந்தர தீர்வு காண வேண்டும் என, இ.கம்யூ., கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.வால்பாறை இ.கம்யூ., கட்சியின் தாலுகா செயலாளர் மோகன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்கின்றனர். வால்பாறை நகரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளாலும், ரோட்டில் விதிமுறை மீறி நிறுத்தப்படும் வாகனங்களாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட நடைபாதையிலும் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளதால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலையில், ரோட்டில் நடந்து செல்வதால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.எனவே, வால்பாறை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், விதிமுறையை மீறி வைக்கபட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரோட்டை விரிவு படுத்தி சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை