உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கழிவுநீர் கலப்பதை தடுக்க மாநகராட்சிக்கு கோரிக்கை

கழிவுநீர் கலப்பதை தடுக்க மாநகராட்சிக்கு கோரிக்கை

போத்தனூர்; கோவை, குறிச்சி அருகே, கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி குளம் உள்ளது. இங்கு தற்போது நீர் நிரம்பி, அதிக நீர் வெளியேறி வருகிறது.இந்நிலையில், குளத்தில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என, குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து, அமைப்பின் நிர்வாகி சாமிநாதன் கூறியதாவது:நீர் வெளியேறும் பகுதியில் இரு இடங்களில், ஒரு அடி ஆழத்திற்கு உடைக்கப்பட்டு, அதிக நீர் செல்கிறது. இதனால் குளத்தில் நீர் இருப்பு விரைவில் குறையும். மாநகராட்சி நிர்வாகம், உடனடியாக சீரமைக்க வேண்டும்.கழிவுநீர் கலப்பதால், ஆகாயத்தாமரை செடிகள் தொடர்ந்து வளர்கின்றன. இதனை தவிர்க்க கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். குளத்தை சுற்றிலும் போடப்பட்டுள்ள இரும்பு வேலி திருட்டு போகிறது. இதனை பாதுகாக்க வேண்டும்.மாச்சம்பாளையம் பகுதியில், குளத்தை தூர் வாரினால் மேலும் அதிக நீர் நிரம்பும். மாநகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தாமல், இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை