| ADDED : நவ 17, 2025 01:05 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு -- வடசித்தூர் ரோட்டின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பர பலகைகள், விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளன. கிணத்துக்கடவு --- வடசித்தூர் ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த ரோட்டின் இரு புறங்களிலும் தனியார் கம்பெனிகள், வீடுகள், கடைகள் மற்றும் தனியார் லே-அவுட்கள் அதிகம் உள்ளது. இந்த ரோட்டின் ஓரத்தில் வளைவு பகுதிகள் மற்றும் பிற இடங்களில் ஆங்காங்கே, தனியார் லே-அவுட்களின் விளம்பர பலகைகள் மற்றும் பிளக்ஸ்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டுனர்களுக்கு கவனச்சிதறல்களை ஏற்படுத்துகிறது. இது விபத்துகளுக்கும் வழி வகுக்கிறது. பலமாக காற்று வீடிசினாலோ அல்லது மழை பெய்தாலோ இந்த பிளக்ஸ்கள் ரோட்டில் சரிந்து விழ வாய்ப்புள்ளது. இதனால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் பல முறை புகார் மனுக்கள் அனுப்பியுள்ளனர். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, போலீசார் இந்த ரோட்டோர பிளக்ஸ்களை அகற்றம் செய்ய, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.