மேலும் செய்திகள்
சாட்டிலைட் இணையசேவை அன்னிய நிறுவனங்கள் ஆர்வம்
03-Nov-2024
கோவை ; கோவை 'எல்காட்' வளாகத்தில், 17.17 ஏக்கரில், ரூ.2,000 கோடி செலவில் புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது என, எல்காட் நிர்வாக இயக்குனர் கண்ணன் தெரிவித்தார்.செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:தற்போது புதிதாக துவங்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா, உடனடியாக செயல்பட உள்ளது. இதன் வாயிலாக, 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இரு நிறுவனங்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஏழு நிறுவனங்கள் வரை உடனடியாக வர உள்ளன. வரும் டிச., இறுதிக்குள் முழுவதும் நிரம்பி விடும். வளாகத்தின் அருகே, 17.17 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 26 லட்சம் சதுர அடி பரப்பில் இரு 'டவர்'களை ரூ.2,000 கோடி மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. முதல்வர் அனுமதி அளித்த உடன் பணிகள் உடனடியாக துவங்கப்படும். இதன் வாயிலாக, 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.புதிதாக துவங்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் வாய்ப்பளிக்க உள்ளோம். ஒருத்தருக்கு கொடுக்காமல் பல்வேறு நிறுவனங்களுக்கு பிரித்து வழங்க திட்டமிட்டுள்ளோம்.கோவையில் தகவல் தொழில்நுட்பத்துக்கு பெரியளவில் வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை திறப்பதற்கு முன்னரே நிறுவனங்கள் செயல்படத் துவங்கி விட்டன.இவ்வாறு, அவர் கூறினார்.
03-Nov-2024