உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் ரூ.51 லட்சம் வழிப்பறி; ஈரோட்டில் போலீஸ் வைத்தது பொறி

கோவையில் ரூ.51 லட்சம் வழிப்பறி; ஈரோட்டில் போலீஸ் வைத்தது பொறி

கோவை : கோவை அவிநாசி சாலையில் நகை வியாபாரியிடம் இருந்து ரூ. 51 லட்சம் வழிப்பறி செய்த வாலிபரை, தனிப்படை போலீசார் ஈரோட்டில் பொறி வைத்து கைது செய்தனர்.கோவை பெரிய கடை வீதி, வைசியாள் வீதியை சேர்ந்தவர் விலாஸ். மகன் அக்ஷய் கடம், 28. தங்க நகை வியாபாரி. சேலத்தில் இருந்து நகைகள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார். இதற்காக அடிக்கடி சேலம் செல்வது வழக்கம்.அப்படி, தங்கம் வாங்க, ரூ. 51 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, கடந்த செப்., 9ம் தேதி வைசியாள் வீதியில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். அவினாசி ரோட்டில் சென்ற போது மற்றொரு பைக்கில் வந்த இருவர் வழிமறித்தனர். அவரை பைக்கில் இருந்து கீழே தள்ளிவிட்டு, அவரிடம் இருந்த ரூ. 51 லட்சத்தை பறித்து சென்றனர்.அக்ஷய் பெரிய கடைவீதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், நகை பறித்துச்சென்றது, அக்சய்க்கு ஏற்கனவே பழக்கமாக கிருஷ்ணா படேல், 30 மற்றும் அவரது நன்பர் விக்ரம் ஜாம்பா யாதவ், 28 என்பது தெரியவந்தது. இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள். கோவையில் நகைப்பட்டறையில் பணியாற்றி வந்துள்ளனர்.அக்சய் பணத்துடன் செல்வதை அறிந்த இருவரும், திட்டம் தீட்டி பணத்தை பறித்து சென்றுள்ளது தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.இதனையடுத்து, வழிப்பறியில் ஈடுபட்ட விக்ரம் என்பவர் ஈரோட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கிருஷ்ணா படேலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை