உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட ரூ.6 கோடி ஒதுக்கீடு

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட ரூ.6 கோடி ஒதுக்கீடு

அன்னுார்; அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட, ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றியங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலான அரசு கட்டடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் போதுமான இடவசதி இல்லாத, பழுதான கட்டிடங்களுக்கு பதில், புதிய கட்டடங்கள் கட்ட, கருத்துரு அனுப்பப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு, 11 ஊராட்சி ஒன்றியங்களில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் புதிதாக கட்ட, 65 கோடியே 49 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.கோவை மாவட்டத்தில், அன்னுாரில் உள்ள 61 ஆண்டுகளான ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பதில், புதிய கட்டிடம் கட்ட ஐந்து கோடியே 99 லட்சம் ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதேபோல் 55 ஆண்டுகளான சுல்தான் பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் புதிதாக கட்ட 5 கோடியே 90 லட்சம் ரூபாய், நீலகிரி மாவட்டத்தில் 63 ஆண்டுகளான ஒன்றிய அலுவலக கட்டடத்திற்கு பதில் புதிய கட்டிடம் கட்ட ஐந்து கோடியே 90 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை