மேலும் செய்திகள்
காணாமல் போன சிறுவனின் உடல் குளத்தில் மீட்பு
1 minutes ago
அன்னூர்: மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று முன்தினம், அன்னூர் கே.ஜி. பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் வாகனங்களில் முதலுதவி பெட்டி சரியாக உள்ளதா, அவசரகால வழி செயல்படுகிறதா, வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஜி.பி.ஆர்.எஸ்., உள்புறம் இரண்டு கேமராக்கள், வெளிப்புறம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார், டிரைவர்களிடம் பேசுகையில், தினமும் பள்ளி வாகனத்தில் டயர்களில் காற்று அழுத்தம் சரி பார்க்க வேண்டும். ஆயில் அளவு, ரேடியேட்டரில் தண்ணீர் அளவு, பரிசோதிக்க வேண்டும். வாகனத்தில் பயணிக்கும் மாணவ, மாணவியரிடம் அவசரகால கதவை எப்படி திறப்பது என்பதை செய்து காண்பிக்க வேண்டும். தீயணைப்பானை பயன்படுத்தும் விதம் குறித்தும், வாகன கதவு வழியாக வெளியேற முடியாவிட்டால், உள்புறம் பொருத்தப்பட்டுள்ள சுத்தியை பயன்படுத்தி கண்ணாடியை உடைத்து வாகனத்தில் இருந்து வெளியேறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிக வேகம் தான் விபத்துக்கு வழிவகுக்கிறது. எதிரில் வாகனம் வராத போது மட்டுமே அதிக ஒளிக்கற்றை உள்ள விளக்குகளை பயன்படுத்த வேண்டும், என்றார். டிரைவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. வேன், பஸ் என 84 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
1 minutes ago