உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சத்குருவிற்கு நன்றி தெரிவிக்கும் சத்குருவின் குடும்ப திருவிழா

சத்குருவிற்கு நன்றி தெரிவிக்கும் சத்குருவின் குடும்ப திருவிழா

கோவை: ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நாளை மத்வராயபுரத்தில் சத்குருவின் குடும்ப திருவிழா நடக்கிறது.இதுகுறித்து, கோவை பிரஸ் கிளப்பில், விழா ஒருங்கிணைப்பாளர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: தொண்டாமுத்துார் வட்டார மக்களின் நலனுக்காக, சத்குரு கடந்த, 34 ஆண்டுகளாக அமைதி, ஆனந்தமாக வாழ யோகா கற்றுத்தருவதுடன், விவசாயம் செழிக்கவும், மலைவாழ் மக்களுக்கு படிப்பு, வேலைவாய்ப்பு, நடமாடும் மருத்துவமனை என, பல்வேறு பணிகளையும், வசதிகளையும் செய்துவருகிறார்.இதையடுத்து, விவசாயிகள், பழங்குடியின மக்கள் என, அனைவரும் கட்சி, ஜாதி பாகுபாடின்றி நன்றி தெரிவிக்கும் விதமாக வரும், 5ம் தேதி மத்வராயபுரத்தில், 'சத்குருவின் குடும்ப திருவிழா' நடத்துகிறோம். விழாவையொட்டி, பெண்களுக்கான கோலப்போட்டி, 600 கலைஞர்கள் பங்குபெறும் ஒயிலாட்டம் இடம்பெறுகிறது.மாலையில், ஈஷா பிரம்மசாரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உட்பட பலர், அருளாசி வழங்குகின்றனர். தொண்டாமுத்துார் பகுதி மக்கள் மட்டுமின்றி, அனைத்து ஊர் மக்களும் கலந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை