உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கருமத்தம்பட்டியில் பொங்கல் பானைகள் விற்பனை தீவிரம்

கருமத்தம்பட்டியில் பொங்கல் பானைகள் விற்பனை தீவிரம்

கருமத்தம்பட்டி:பொங்கல் பண்டிக்கையை ஒட்டி, கருமத்தம்பட்டியில் பொங்கல் பானைகள் விற்பனை தீவிரமாக நடந்தது.பொங்கல் பண்டிகையை ஒட்டி, சூலுார், கருமத்தம்பட்டி பகுதியில், உற்பத்தி செய்யப்பட்ட பொங்கல் பானைகள் விற்பனை செய்யும் பணி, கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இன்று சூரிய பொங்கலும், நாளை மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்பட உள்ளதால், பொங்கல் பானைகள் விற்பனை தீவிரமாக நடந்தது.கருமத்தம்பட்டியை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் சிவசாமி கூறியதாவது:பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். பொங்கல் பண்டிகையை ஒட்டி, உற்பத்தி செய்து வைத்துள்ள பொங்கல் பானைகளை அழகுபடுத்தி, விற்பனை செய்து வருகிறோம். அரை கிலோ முதல், 5 கிலோ வரை கொள்ளளவு கொண்ட பானைகள் உள்ளன. வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, அழகுபடுத்தி கொடுக்கிறோம். பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள் சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவுக்கு, கடந்த இரு நாட்களில், ஏராளமான பானைகள் விற்பனையாகின. தற்போது, வீட்டு பொங்கல், மாட்டு பொங்கல் வைக்கும் பானைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை