உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சண்டீஸ்வரர் நாராயண குருபூஜை விழா

சண்டீஸ்வரர் நாராயண குருபூஜை விழா

கிணத்துக்கடவு- கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர் சோற்றுத்துறை நாதர் கோவிலில், சண்டீஸ்வரர் நாராயண குரு பூஜை விழா நேற்று முன்தினம்நடந்தது.சுவாமி புற்றில் குடிகொண்டிருந்த போது, சண்டீஸ்வரர் நாராயணன் மாட்டுடன் சென்று, புற்றில் பால் அபிேஷகம் செய்ததாகவும், அதனால், சுவாமிக்கு அபிேஷகம் நடக்கும் போது, சண்டீஸ்வரர் நாராயண குருவுக்கும் அபிேஷக ஆராதனை நடப்பதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.குருபூஜையில், சோற்றுத்துறை நாதர், சண்டீஸ்வரர் நாராயண குருவுக்கு, பால் அபிஷேகம் மற்றும் அரிசி, மஞ்சள், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவிய சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை