மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நாளை சிறப்பு மருத்துவ முகாம்
10 minutes ago
இலவச மருத்துவ முகாம் 200 பேருக்கு பரிசோதனை
11 minutes ago
நவரச நாட்டியாலயாவின் 13வது சலங்கை பூஜை
13 minutes ago
இன்று இனிதாக
14 minutes ago
உடுமலை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மடத்துக்குளத்தில்நடந்தது. சங்கத்தின் மாநிலத்தலைவர் நாககிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கண்ணன், மாநில பொருளாளர் பாலாஜி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள் வாயிலாக, மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், பணியாற்றும் கணினி உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட உதவியாளர் காலிப்பணியிடங்களை, ஊரக வளர்ச்சி துறை இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வாயிலாக வழங்க வேண்டும். ஊராட்சி துாய்மை காவலர் மற்றும் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவராக தர்மர், மாவட்டச்செயலாளராக சுப்பிரமணி, மாவட்ட பொருளாளராக பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
10 minutes ago
11 minutes ago
13 minutes ago
14 minutes ago