சந்தோஷ் ஆட்டோமொபைல்சில் புதிய சாத்தி வாகனம் அறிமுகம்
கோவை; அசோக் லேலண்ட் நிறுவனத்தின், புதிய அறிமுகமான சாத்தி வாகனத்தின் அறிமுக விழா, சந்தோஷ் ஆட்டோ மொபைல்ஸ் ஷோரூமில் நடந்தது.வாடிக்கையாளர்களுக்கு, புதிய சாத்தி வாகனத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றினை, சந்தோஷ் ஆட்டோ மொபைல்ஸ் இணை துணைத் தலைவர் அருண் எடுத்துரைத்தார்.அவர் கூறுகையில், ''இந்த வாகனத்திற்கு, ஐந்து வருடம் அல்லது இரண்டு லட்சம் கி.மீ., வாரன்டி முதன் முறையாக வழங்கப்பட்டுள்ளது. சிறியது முதல் பெரிய நிறுவனங்கள் வரை, தங்களது தொழிலை மேம்படுத்த, இவ்வாகனம் உறுதியான தேர்வாக இருக்கும். சிறப்பான முன்பணம், குறைந்த மாதத் தவணை, உடனுக்குடன் நிதியுதவியும் உண்டு,'' என்றார். விழாவில், முதல் சாத்தி வாகனத்தின் சாவியை, அசோக் லேலண்ட் ஏரியா மேலாளர் ராஜ்குமாரிடமிருந்து, சரண் சிபின்னர்ஸ் நிர்வாக இயக்குனர் சரவணன் பெற்றுக்கொண்டார்.அசோக் லேலண்ட் டெரிட்டரி மேலாளர் ஜெகதீஷ், சந்தோஷ் ஆட்டோமொபைல்ஸ் விற்பனை மேலாளர் மல்லுக் முஹம்மது ஆகியோர் உடனிருந்தனர்.