உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.பி.ஐ., வீட்டுக் கடன் கண்காட்சி துவங்கியாச்சு

எஸ்.பி.ஐ., வீட்டுக் கடன் கண்காட்சி துவங்கியாச்சு

துடியலூர்:கவுண்டம்பாளையத்தில் உள்ள கல்பனா திருமண மண்டபத்தில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் இரண்டு நாள் வீட்டுக்கடன் கண்காட்சி, நேற்று துவங்கியது.வி.ஜி., விளம்பர நிறுவனம் இணைந்து நடத்துகிறது. கண்காட்சியை நேற்று காலை, தியா பவுண்டேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஆலம் விழுதுகளின் தலைவர் மீனா ஜெயக்குமார், குத்துவிளக்கேற்றினார்.முகாமில், 8.40 சதவீதம் முதல் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் உடனடியாக கடன் ஒப்புதல் பெற முடியும். பரிசீலனை கட்டணம் இல்லை. இங்கு புதிய வீடு வாங்க மற்றும் கட்டிய வீட்டில் மாறுதல்கள் செய்ய மற்றும் அடமான கடன் ஆகியவற்றை குறைந்த வட்டி விகிதத்தில், பொதுமக்கள் பெற முடியும்.முன்னணி பில்டர்கள் அரங்கு அமைத்துள்ளனர். 10 லட்ச ரூபாய் முதல் வீடு மற்றும் வீட்டு மனைகளை வாங்கலாம். உடனடியாக குடியேற தயார் நிலையில் உள்ள வீடுகளும் உள்ளன. வளாகத்தில், விசாலமான கார் பார்க்கிங், குழந்தைகள் விளையாட்டு வசதிகள், இலவச மருத்துவ பரிசோதனை வசதிகளும் உள்ளன. கண்காட்சி, இன்று இரவு, 8:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ