மேலும் செய்திகள்
வண்ணக் கோலமிட்டு எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு
3 minutes ago
ஆட்டோமேட்டிவ் துறையின் புதிய நுட்பங்கள் கண்காட்சி
4 minutes ago
வேலையுடன் ஊக்கத்தொகை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
4 minutes ago
கோவைக்கு கிடைத்தது விருது
5 minutes ago
கோவை: மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், குழந்தைகளுக்கான தபால் தலை சேகரிப்பு குழு கணக்கு துவங்கப்பட்டது. பள்ளி குழந்தைகள் 40 பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். தபால் தலை கணக்கு' என்பது, தபால் தலைகளை சேகரிப்பதற்காக, தபால் அலுவலகங்களில் திறக்கப்படும் ஒரு வகை கணக்கு. இந்த கணக்கு துவங்க, ரூ.200 மட்டும் செலுத்தினால் போதும். இதன் வாயிலாக, புதிய தபால் தலைகள் வெளியான உடன், இல்லத்துக்கே தபால் வாயிலாக பட்டுவாடா செய்யப்படும். கோவை தபால் கோட்டத்தின் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தின் சார்பாக, பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், பேனா பரிசாக வழங்கப்பட்டது. பேரன்பு' என்ற பெயரில், தாத்தா - பாட்டிக்கு கடிதம் எழுதும்' செயல்பாட்டில் இந்த பள்ளி குழந்தைகளும் பங்கேற்றனர். பள்ளியில் வழங்கப்பட்ட இன்லேண்ட் லெட்டரில், குழந்தைகள், தங்கள் அன்பு, மரியாதை மற்றும் நன்றியை, தங்கள் தாத்தா, பாட்டிக்கு முழு தபால் முகவரியுடன் எழுதி அனுப்பினர். வரும் 24ம் தேதி வரை சேகரிக்கப்படும் இக்கடிதங்கள், கோயமுத்துார் விழா'வின் முடிவில், அவரவர், தாத்தா, பாட்டிக்கு, தபால்காரர் வாயிலாக அவர்களின் வீடுகளில் பட்டுவாடா செய்யப்படும். கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர், கோயமுத்துார் விழா தலைவர் சண்முகம், ஆதர்ஷ், பிந்து, கெசிக்கா, சுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.
3 minutes ago
4 minutes ago
4 minutes ago
5 minutes ago