உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் அசத்தல்

அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் அசத்தல்

பொள்ளாச்சி:நெகமம் அருகே சுவஸ்திக் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.பொள்ளாச்சி நெகமம் அருகே சின்னேரி பாளையம் சுவஸ்திக் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.இதில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், தங்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளான மழைநீர் சேகரிப்பு, எரிமலை வெடிப்பு, விண்வெளி ஆய்வு மையம், சிறுநீரக மாதிரி, காற்றாலை மின் உற்பத்தி, புவி மாதிரி ஏவுகணை மாதிரி கூட்டு நுண்ணோக்கி மாதிரி ஆகியவற்றை காட்சிப்படுத்தினர்.பள்ளியின் தாளாளர் தீபா காந்தி தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியை தமிழரசி பேசினார். ஆசிரியர்கள் நீலவேணி, மோகன்ராஜ் ஆகியோர் அறிவியல் கண்காட்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி