உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறிவியல் திறனறித்தேர்வு புத்தகம்; பள்ளி மாணவர்களுக்கு வழங்கல்

அறிவியல் திறனறித்தேர்வு புத்தகம்; பள்ளி மாணவர்களுக்கு வழங்கல்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி அரசுப்பள்ளியில், விலையில்லா அறிவியல் திறனறித்தேர்வு புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், துளிர் அறிவியல் திறனித்தேர்வு வரும், 21ம் தேதி நடக்கிறது. இதற்காக, மாணவர்கள், 30 பேருக்கு துளிர் அறிவியல் திறனறித் தேர்வுக்காக புத்தகம் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி, ஏரிப்பட்டி பள்ளியில் நடந்தது.இந்த விலையில்லா புத்தகத்தை, வெங்கிட்டாபுரம் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சித்ரா வழங்கினார். பட்டதாரி ஆசிரியை கீதா கூறியதாவது:தமிழகம் முழுக்க இத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதில், ஏரிப்பட்டி பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, 30 பேர் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வில் எங்களது பள்ளி மாணவர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக பங்கேற்று சான்றிதழ் பெறுகின்றனர்.இத்தேர்வுக்கான புத்தக ஆசிரியர் கீதா, 1,000 அறிவியல் கேள்விகளை தொகுத்து வினா, விடைகளை நுாலாக்கி மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். மேலும், புத்தக அட்டைப்படத்தில் 'க்யூஆர்' கோடு ஸ்கேன் செய்தால், 5,000 கேள்விகளுக்கான விடைகள், ஆடியோவாக குரல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை கேட்கும் மாணவர்கள் தெளிவு பெற முடியும்.மாணவர்களின் அறிவியல் திறன்கள், மனப்பான்மை, கண்டுபிடிப்புகள், காரணங்களை அன்றாட வாழ்வியலோடு இணைந்து கற்றல் ஆகியவற்றை பெருக்க வழி வகுக்கும். இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கி, அறிவியல் விஞ்ஞானிகளுடன் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை