அனுமதியின்றி இரண்டாம் தளம்; சீல் வைத்து மாநகராட்சி அதிரடி
கோவை; மாநகராட்சி, 81வது வார்டு டவுன்ஹால் அடுத்த வைசியாள் வீதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், அனுமதியின்றி இரண்டாம் தளம் கட்டப்பட்டுள்ளது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகா ர் சென்றுள்ளது. நகரமைப்பு பிரிவினர் விதிமீறல் கட்டடத்தை ஆய்வு செய்தபோது, கட்டட அனுமதி பெறாமல் இரண்டாம் தளம் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. அக்கட்டடத்துக்கு, மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், 'கட்டட அனுமதி பெறாமலும், விதிமீறல்களுடனும் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்தது. ஒரு மாதத்துக்கு முன்பு கட்டட உரிமையாளரிடம் நோட்டீஸ் வழங்கினோம். கடந்த, 25ம் தேதியுடன், 30 நாள் கெடு முடிய, தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டத்தின் கீழ், 'சீல்' நடவடிக்கை எடுத்துள்ளோம்' என்றனர்.