உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலையில் விதைப்பந்து தயாரிப்பு

வேளாண் பல்கலையில் விதைப்பந்து தயாரிப்பு

கோவை : கோவை, வேளாண் பல்கலை வளாகத்தில் , வேளாண் பொறியியல் கல்லூரி சார்பில், ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற விதைப்பந்து தயாரிக்கும் நிகழ்வு நடந்தது.மஞ்சள் கொன்றை, சீத்தாப்பழம், இலவம்பஞ்சு, வாகை, வேம்பு, பசுபிக் ரோஸ்வுட், தூங்குமூச்சி மர விதைகளைப் பயன்படுத்தி, 15,000 விதைப்பந்துகள் உருவாக்கப்பட்டன.செம்மண் மற்றும் மண்புழு உரத்தை, இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கலந்து, அதில் விதைகள் பொதியப்பட்டன.நிகழ்ச்சியில், பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி பங்கேற்று, “இதுபோன்ற திட்டங்கள், சுற்றுச்சூழல் மற்றும் மரங்கள் பாதுகாப்பு குறித்தும், அவை எப்படி பருவநிலை மாறுபாடுகளை மீட்டெடுக்கும் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும். இந்த விதைப்பந்துகளால் உருவாகும் அடர் வனம், ஏராளமான உயிரினங்களுக்கு புகலிடமாக இருக்கும்,” என்றார்.தொடர்ந்து விதைப்பந்து உருவாக்கும் போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விஞ்ஞானிகள், மாணவர்கள், உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை