உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தாமாக கடிப்பதும், அடிப்பதும் கடுமையான ஆட்டிச பாதிப்பு

 தாமாக கடிப்பதும், அடிப்பதும் கடுமையான ஆட்டிச பாதிப்பு

கோவை: கடுமையான ஆட்டிசம் பாதிப்பு உள்ள குழந்தைகள், தாமாக தங்களை கடித்துக்கொள்வதும், அடித்துக்கொள்வதும் பொதுவாக காணப்படும் பிரச்னை; சரியான ஆக்குபேஷனல் தெரப்பி வழங்க வேண்டியது அவசியம். இதுகுறித்து, ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் ஸ்வாதி தர்மராஜ் கூறியதாவது: ஆட்டிசம் பாதிப்பு உள்ள குழந்தைகள் உள்ள வீடுகளில், பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு சில குழந்தைகள் தங்களால் சில விஷயங்களை வெளிப்படுத்த முடியாமலும், நினைப்பதை செயல்படுத்த முடியாமலும் இருப்பார்கள். இதை ஆரம்ப நிலையில் புரிந்து, சரிசெய்துவிட்டால் சிக்கல்கள் இல்லை. இப்பிரச்னை தொடர்ந்தால், ஒரு சிலர் தாமாக தங்களை கடித்துக்கொள்வதும், காயப்படுத்திக்கொள்ளும் செயல்பாடுகளிலும் ஈடுபடுவார்கள். இதை சரியான பயிற்சி வாயிலாக சரிசெய்ய முடியும். சென்சரி சார்ந்த சிக்கல்கள், பிஹேவியர், கம்யூனிகேஷன் மற்றும் எமோசனல் பிரிவுகளில் பிரச்னைகள் இருக்கலாம். அதை வெளிப்படுத்த முடியாமல் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். எதனால், இந்த பிரச்னை என்பதை அறிந்து, பயிற்சி அளிக்க வேண்டும். இதுபோன்ற பாதிப்பு உள்ள குழந்தைகளை கை, கால்களை கட்டிப்போடுவது, திட்டுவது, சத்தமிடுவதால், பிரச்னைகள் மேலும் அதிகரிக்கும். உடனடியாக ஆக்குபேஷனல் பயிற்சி துவக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ