உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சர்வீஸ் ரோட்டோரம் கழிவுநீர் தேக்கம்; பொதுமக்கள் பாதிப்பு

 சர்வீஸ் ரோட்டோரம் கழிவுநீர் தேக்கம்; பொதுமக்கள் பாதிப்பு

கழிவு நீர்தேக்கம் கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள, சர்வீஸ் ரோட்டோரம் இருக்கும் கால்வாயில் மழை நீருடன் அதிகளவில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதன் மேல் பகுதி திறந்தநிலையில் இருப்பதால் அவ்வழியாக வரும் பொதுமக்கள் இந்த கால்வாயில் விழுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறை சார்பில் கழிவு நீரை வெளியேற்றி கால்வாயின் மேல் பகுதியை மூட வேண்டும். -- பெருமாள்: குறுக்கு பட்டையால் தொல்லை பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் இருந்து, பல்லடம் ரோடு திரும்பும் இடத்தில் ரோட்டின் நடுவே தொடர் வெள்ளை குறுக்கு பட்டை இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். சில நேரங்களில் பைக் ஓட்டுநர்கள் கீழே விழுகின்றனர். எனவே, இந்த குறுக்கு பட்டையை அகற்றம் செய்ய வேண்டும். -- டேனியல்: புதரில் மறைந்த அறிவிப்பு கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே விளையாட்டு மைதானம் அருகில், சர்வீஸ் ரோட்டோரம் உள்ள அறிவிப்பு பலகை புதரில் மறைந்துள்ளது. வாகன ஓட்டுநர்கள் கண்களுக்கு தெரியாத படி அறிவிப்பு பலகை இருப்பதால், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் இப்பகுதியில் உள்ள புதர்களை அகற்றம் செய்ய வேண்டும். -- மணிகண்டன்: ரோட்டோரத்தில் கழிவு பொள்ளாச்சி, தெப்பக்குளம் எதிரே உள்ள இடத்தில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் அவ்வப்போது கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுச்சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் இதை கவனித்து உடனடியாக கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும். -- டேவிட்: பொதுச்சுகாதாரம் பாதிப்பு கிணத்துக்கடவு, தாமரைக்குளம் ரயில்வே கேட் அருகில் ரோட்டோரம் அதிக அளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரம் பாதித்துள்ளது. இதை ஊராட்சி நிர்வாகத்தினர் கவனித்து குப்பையை அகற்றம் செய்ய வேண்டும். -- கருணாகரன்: மழைநீர் தேக்கம் உடுமலை - பழநி ரோட்டில் ஆங்காங்கே ஏற்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளங்களை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - குமார்: கழிவுகளை அகற்றணும் உடுமலை குட்டைத்திடல் பகுதியில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் கட்டட கழிவு, குப்பையை கொட்டுகின்றனர். இதனால், துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவவும் வாய்ப்பு உள்ளது. எனவே, அங்கு கட்டட கழிவுகளை கொட்டுவோர் மீது நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சிவராஜ்: பொதுமக்கள் பாதிப்பு உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான மக்கள் பல்வேறு பணிகளுக்காக வருகின்றனர். ஆனால் வளாகத்தில் கழிப்பிட வசதி இல்லாததால், மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். அங்கு சுகாதார வளாகம் கட்ட பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சோமு: நிழற்கூரை வேண்டும் உடுமலை புதிய பஸ் ஸ்டாண்டில், பயணியருக்கு நிழற்கூரை இல்லாமல் உள்ளது. இதனால், அவர்கள் திறந்த வெளியில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, அங்கு நிழற்கூரை அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சுப்பிரமணி: தரைப்பாலம் பாதிப்பு உடுமலை காந்திநகர் பஸ் ஸ்டாப் அருகே தரைப்பாலம் உள்ளது. இப்பாலம் சேதமடைந்து காணப்படுவதால், வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகிறது. இந்த தரைப்பாலத்தை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கனகராஜ்: துார்வார வேண்டும் உடுமலை ஆண்டாள் சீனிவாசன் லே-அவுட்டிலிருந்து ராஜலட்சுமி நகர் செல்லும் ரோட்டில், மழைநீர் வடிகால் துார்வாரப்படாமல் குப்பை நிறைந்து காணப்படுகிறது. இதனால், தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கிறது. இதை துார்வார நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சண்முகம்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை