உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொரோனா காலத்தில் வந்த ஒரு ஆசைதான் சண்முகவாசினியின் இன்றைய பிசினஸ்

கொரோனா காலத்தில் வந்த ஒரு ஆசைதான் சண்முகவாசினியின் இன்றைய பிசினஸ்

எல்லோருக்கும் பிடித்தது, எனக்கும் பிடித்ததாக இருப்பதால், படிப்பு, தொழில் என, 'இனிப்பாக' நகர்ந்து செல்கிறது வாழ்க்கை என்று, மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கிறார் சண்முகவாசினி.பொழுது போக்காக துவங்கிய இவரது பயணம், இன்று, ஒரு நாள் ஓய்வு கிடைக்காதா என எங்கும் அளவுக்கு, 'பிசி'யாக இருக்கிறார்.''கொரோனா காலகட்டம். கடைகள் மூடிய தருணம். திடீரென கேக் சாப்பிட வேண்டும் என்ற ஆசை. வீட்டிலேயே செய்து சாப்பிட்டேன். சுமாராக இருந்தது. பின், சமூக வலைதளங்களின் உதவியால், இதன் அடிப்படையை கற்றுக் கொண்டேன். இதை தொழிலாக கொண்டு சென்றால் எப்படி இருக்கும் என தந்தையிடம் கேட்டபோது, 'அவர் கொடுத்த 20 ஆயிரம் ரூபாயில், ஆர்டர்கள் பெயரில் செய்து கொடுத்தேன்,'' .''ஆரம்பத்தில், 500, 1,000 என்று லாபம் இருக்கும். தந்தை என் ஆர்வத்தை புரிந்து கொண்டு, உணவு மற்றும் ஊட்டச்சத்து படிக்க ஊக்குவித்தார். இதோ இப்போது வரை பிசிதான்,'' என்கிறார் சண்முகவாசினி.காலையில் கல்லுாரி, மாலையில் தொழில் என்று ஓடிக்கொண்டு இருக்கிறார் இவர்.''எனக்கு பிடித்ததை செய்வதால் சிக்கல் இல்லை. படித்து முடித்த பின், தொழிலை விரிவுபடுத்தவுள்ளேன்,''''ஆர்டர்களின் பெயரில், 'கேக்' செய்து கொடுப்பதுடன், பயிற்சியும் வழங்குகிறேன். அனைத்து வகை கேக்குகளையும் தயாரிக்கின்றேன். மாதத்தில், 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கிடைக்கிறது,''இவர், தான் தயாரிக்கும் கேக்குகளுக்கு நிறமிகளை அதிகமாக பயன்படுத்துவதில்லை. 'பொம்மீஸ் பேக்கரி' என்ற பெயரில், பெரியளவில் பல கிளைகள் திறக்க வேண்டும் என்பதே சண்முகவாசினியின் இலக்கு.சாதிப்பீர்கள் சண்முகவாசினி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை