உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரு வேறு சம்பவங்களில் வெள்ளி, பணம் திருட்டு

இரு வேறு சம்பவங்களில் வெள்ளி, பணம் திருட்டு

கோவை; துடியலுார், தொப்பம்பட்டி வேலு நகரை சேர்ந்தவர் ராமு, 65. நேற்று முன்தினம் இவர், தனது மகன் மற்றும் பேரக்குழந்தையை பார்க்க, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த நபர்கள், அலமாரியில் இருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த, ரூ.6,000 திருடிச் சென்றனர். துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர். * கணுவாய் சோமயம்பாளையம், காஸ்மோ வில்லேஜ் அவென்யூவை சேர்ந்தவர் செல்வி, 48. நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு, பக்கத்து வீதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து, வெள்ளி பாத்திரம், குங்குமச்சிமிழ், இரு கை கடிகாரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர். வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !