மேலும் செய்திகள்
நூறு நாள் திட்ட சமூக தணிக்கை துவங்கியது
10-Sep-2024
அன்னுார் : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், சமூக தணிக்கை செய்யும் பணி செப். 2ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு வாரமும், கோவை மாவட்டத்தில், 10 ஊராட்சிகளில் சமூகத் தணிக்கை நடைபெறுகிறது. இந்த வாரம், அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில் கரியாம் பாளையம் ஊராட்சி, காரமடை ஒன்றியத்தில் இரும்பறை, பெரிய நாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் அசோகபுரம், சூலூர் ஒன்றியத்தில் காடுவெட்டி பாளையம், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் ஜல்லிப்பட்டி உள்ளிட்ட 10 ஊராட்சிகளில், நேற்று சமூக தணிக்கை துவங்கியது. இன்றும், 3ம் தேதியும், தணிக்கையாளர்கள், ஆவணங்களை ஆய்வு செய்து, பணிகளை நேரில் அளவீடு செய்ய உள்ளனர்.
10-Sep-2024