உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மூன்று மாதங்களுக்கு பிறகு சமூக தணிக்கை துவங்கியது

 மூன்று மாதங்களுக்கு பிறகு சமூக தணிக்கை துவங்கியது

அன்னுார்: மூன்று மாதங்களுக்கு பிறகு 100 நாள் வேலை குறித்த சமூக தணிக்கை அன்னுாரில் நேற்று துவங்கியது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கடந்த 2008ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா, நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா, என்பதை தெரிந்து கொள்ள மத்திய அரசு சமூக தணிக்கையை செயல்படுத்தி வருகிறது. அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், சில ஊராட்சிகளில், கடந்த 2024 ஏப். 1 முதல், 2025 மார்ச் 31 வரை செய்யப்பட்ட பணிகள் குறித்த சமூக தணிக்கை கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடந்தது. சில ஊராட்சிகளில் சமூக தணிக்கை நடத்திய பின்னர் வட்டார வள அலுவலர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். இதனால் மூன்று மாதங்களாக மற்ற ஊராட்சிகளில் சமூகத் தணிக்கை நடைபெறவில்லை. இந்நிலையில் மீண்டும் சமூக தணிக்கை துவங்கியுள்ளது. பொகலூர் ஊராட்சியில், வட்டார வள அலுவலர் சாரா தலைமையிலான தணிக்கையாளர்கள், 100 நாள் வேலை திட்ட ஆவணங்களை நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் திட்ட அறிக்கை தயாரித்து வருகிற 21ம் தேதி நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை