மேலும் செய்திகள்
மூன்று மாநிலங்களிலும் வெற்றி பெறுவோம்
6 minutes ago
சிறந்த தண்ணீர் மேலாண்மைக்காக பொள்ளாச்சி விவசாயிக்கு விருது
10 minutes ago
கலெக்டர் ஆபீசுக்கு குண்டு மிரட்டல்
11 minutes ago
பொள்ளாச்சி: ''பஸ்களை பாலத்தில் இயக்காமல், ஊருக்குள் சென்று வர வேண்டும்,'' என, விழிப்புணர்வு கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் வலியுறுத்தினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், பொள்ளாச்சி தாலுகா லாரி உரிமையாளர்கள் திருமண மண்டபத்தில் நடந்தது. பஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சேரன் வரவேற்றார்.வட்டார போக்குவரத்து அலுவலர் செழியன், டிரைவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பேசினார். முன்னாள் டிராபிக் வார்டன் கமலக்கண்ணன், தமிழ்நாடு போக்குவரத்து கழக அதிகாரி சுப்ரமணியம் ஆகியோர் பேசினர். பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் ராஜா நன்றி கூறினார். அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் பங்கேற்றனர். வட்டார போக்குவரத்து அலுவலர் செழியன் கூறியதாவது: டிரைவர்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் குறித்தும், பிரச்னைகள் வராமல் தடுப்பது குறித்தும் விளக்கப்பட்டது.பொள்ளாச்சி - கோவை செல்லும் பஸ்களில், கிணத்துக்கடவு, மலுமிச்சம்பட்டி செல்லும் பயணிகளை ஏற்றுவதில்லை என புகார் எழுகிறது. அனைத்து பயணியரையும் அழைத்து செல்ல வேண்டும். பஸ்களை நிறுத்தி பயணியரை இறக்கிவிட வேண்டும். வயதானவர்களை பாதுகாப்பாக இறக்கி விட வேண்டியது பொறுப்பு என்பதை உணர வேண்டும். கிணத்துக்கடவு, கோமங்கலம்புதுார் ஊருக்கு செல்லாமல், பாலத்தில் மட்டும் பஸ்கள் செல்வதாக புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பயணியரிடம் கோபமாக பேசாமல் தன்மையாக பேச வேண்டும். பாட்டு சப்தம் அதிகமாக வைத்து, பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. டிக்கெட்டுக்கு போக மீதமுள்ள சில்லரை முறையாக வழங்க வேண்டும். ரோட்டில் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும். இவ்வாறு, கூறினார்.
6 minutes ago
10 minutes ago
11 minutes ago